பதிவு செய்த நாள்
11
மே
2020
11:05
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி ேஷத்திரம், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள வெற்றி விநாயகர் சுவாமிக்கு, நேற்று காலை 11.00 மணியளவில் பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியப்பொடி, உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 12:00 மணியளவில் வெற்றி விநாயகர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜையின்போது, பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. தொடர்ந்து, உலக மக்கள் நலன்; வெயிலின் தாக்கம் தணிய வேண்டியும் விநாயகர் சுவாமிக்கு விசேஷ பூஜை நடந்தது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குழு தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.