பதிவு செய்த நாள்
11
மே
2020
01:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,500 கிராம கோவில் பூசாரிகள் உள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவில்கள் மூடப்பட்டு, வருமானமின்றி உள்ளனர்.அதனால், இவர்களுக்கு, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதாக, அரசு அறிவித்தது. அந்த தொகை, சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், பலருக்கு கிடைக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
கிராம கோவில் பூசாரிகள் சங்க பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், நிவாரணம் குறித்து கேட்டதற்கு, சரியான ஆவணங்கள் கொடுக்காததால், தாமதம் ஏற்பட்டுஉள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆதார் எண், வங்கி கணக்கு புத்தக நகல், வி.ஏ.ஓ., சான்று உள்ளிட்டவற்றை இணைத்து தான் கொடுத்துள்ளோம். எனினும், பலருக்கு, நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை என்றார்.