பதிவு செய்த நாள்
08
ஜூன்
2020
03:06
புதுச்சேரி : அங்காளம்மன் கோவில் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு நேற்று மூலமந்திர ஹோமம் நேற்று நடந்தது. புதுச்சேரி, சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவில், ஊரடங்கு தளர்வை தொடர்ந்து இன்
று காலை 7:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அதனையொட்டி நேற்று கோவில் வளாகம் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அம்மனுக்கு மூலமந்திர ஹோமம் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீரால் மூலவர் அங்காளம்மன், விநாயகர், சுப்ரமணியர், விஷ்ணு, துர்கை, பத்ரகாளி செல்லியம்மன், பாவாடைராயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.கோவில் காலை 7:00 மணி முதல் 11:00 மணிவரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார், கோவில் தனி அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.