பதிவு செய்த நாள்
11
ஜூன்
2020
04:06
அன்னூர்: அன்னூர் தாலுகாவில், ஐந்து கோவில்கள் முன், ஒற்றைக்காலில் நின்று, இந்து முன்னணியினர் நேற்று, போராட்டம் நடத்தினர். கோவில்களை உடனடியாக வழிபாட்டுக்கு திறக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில், கோவில்கள் முன்பு ஒற்றைக்காலில் நின்று கோஷம் எழுப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்னூரில், பழமையான மன்னீஸ்வரர் கோவில் முன், வடக்கு மாவட்ட செயலாளர் குட்டி தலைமையில், ஒற்றைக்காலில் நின்று, கோவிலை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி, ஒன்றிய தலைவர் மாரப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். கோவில்பாளையத்தில், பிரசித்தி பெற்ற காலகாலேஸ்வரர் கோவில் முன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் தலைமையில், போராட்டம் நடந்தது. எல்லப்பாளையம் பழனியாண்டவர் கோவில், கஞ்சபள்ளி தேனீஸ்வரர் கோவில், காளப்பட்டி மாரியம்மன் கோவில்கள் முன்பும் போராட்டம் நடந்தது.