சிதம்பரம் நடராஜர் ஆனி திருமஞ்சன விழா: பந்தல் அமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2020 01:06
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி வாயிலில் பந்தல் போடும் பணி நடந்து வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தளங்கள் திறக்க அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சன விழா 19ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது.வழிபாட்டு தளங்கல் திறக்கப்படாததால் விழாவில் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை.இதன் காரணமாக கோவில் பொது தீட்சிதர்கள் விழாவை கோவிலுக்கு உள்ளேயே நடத்த முடிவு செய்துள்ளனர். முக்கிய விழாவான தேர் திருவிழா வரும் 27ம் தேதி நடராஜர் சிவகாமசுந்தரி அம்மன் சாமி புறப்பாட்டை கோயில் உள் வளாகத்தில் சுற்றி வந்து பின்பு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, 28 ம் தேதி அதிகாலை அபிஷேகம் முடிந்த கையோடு தரிசனத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக 25 பேருக்கு அனுமதி வழங்கி சுவாமி துாக்க முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதன்படி கீழ வீதி முகப்பில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.