குருபெயர்ச்சி: குருவித்துறை கோயிலில் நடைதிறப்பு மாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2012 09:05
குருவித்துறை: குருவித்துறை குருபகவான் கோயிலில் மே.17 குருபெயர்ச்சியை முன்னிட்டு நடை திறப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் முன்பு குருபகவான் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மே.17 ல் மாலை 6.27 மணிக்கு குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடபெயர்கிறார். இதையொட்டி அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜையா மே.15 முதல் 17, மாலை 4.30 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. இதையொட்டி, ""தமிழக பல மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வசதியாக கோயில் நடை திறப்பு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "மே.15, 16ல் காலை 8 முதல் 1.30 மணி, மாலை 3.30 முதல் இரவு 7 மணி வரை நடை திறந்திருக்கும். குருபெயர்ச்சி மே.17 அன்று காலை 7 முதல் நள்ளிரவு 12 மணி வரை நடை திறந்து இருக்கும். அன்று மாலை 6.20 க்கு மஹாயாக பூஜை, குருபகவானுக்கு அபிஷேகம் நடக்கிறது என்றார். குருவித்துறை ஊராட்சி தலைவர் கர்ணன், துணைத் தலைவர் பன்னீர், தக்கார் செல்வி, ஊழியர் வெங்கடேசன் உடன் இருந்தனர்.