சாத்தூர்:சாத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா, கடந்த மே 1 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் நகர் வலம் வந்தார். பத்தாம் நாள் தேர்திருவிழா நடந்தது.முக்கிய வீதிகள் வழியா சென்ற தேர், மாலை 7.15 மணிக்கு கோயிலை வந்தடைந்தது. ஏற்பாடுகளை சாத்தூர் இந்து நாடார்கள் உறவின் முறை கமிட்டியினர் செய்திருந்தனர்.