சிருங்கேரி சங்கராச்சார்ய பாரதீ தீர்த்த சுவாமிக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2012 10:05
ராஜபாளையம்:ராஜபாளையத்திற்கு வந்த சிருங்கேரி சங்கராச்சார்ய பாரதீ தீர்த்த சுவாமிகளுக்கு நேற்று மாலை தென்காசி ரோட்டில் உள்ள மாரியம்மன்கோயிலில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு நடந்தது.கடையநல்லூரில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு பாரதீ தீர்த்த சுவாமிகள் ராஜபாளையம் வந்தார். மாரியம்மன் கோயிலில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா தலைமையில் வேதமந்திரம் முழங்க பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு நடந்தது. வரவேற்பில் பல்லக்கில் வேதம் எடுத்து செல்லப்பட்டது. பள்ளி மாணவர்களின் மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் நடந்தது. ரோட்டின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் நின்று வழிபட்டனர். ராம்கோ குரூப் துணைசேர்மன் வெங்கட்ராம ராஜா, கோபால்சாமி எம்.எல்.ஏ., ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் செல்வ சுப்பிரமணிய ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். ராமமந்திரத்தில் இரவு 8 மணிக்கு ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வர பூஜை நடந்தது.