டவுன் திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் நாளை சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2012 10:05
திருநெல்வேலி : நெல்லை டவுன் திரிபுரசுந்தர அம்பாள் கோயிலில் நாளை(14ம் தேதி) காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. நெல்லை டவுன் சம்பந்த மூர்த்தி கோயில் தெருவில் உள்ள திரிபுரசுந்தர அம்பாள் கோயில் கொடை விழா கடந்த 8ம் தேதி நடந்தது. கொடை விழாவின் 8ம் நாள் பூஜையை முன்னிட்டு நாளை(15ம் தேதி) காலை அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் அன்னதான பக்தர்கள் குழு சார்பில் 2ம் ஆண்டாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.