பதிவு செய்த நாள்
14
மே
2012
10:05
நாமக்கல்: திண்டமங்கலம் விநாயகர், மாரியம்மன், மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா, மே 31ம் தேதி கோலாகலமாக நடக்கிறது.நாமக்கல் அடுத்த திண்டமங்கலத்தில், விநாயகர், மாரியம்மன் மற்றும் மதுரை வீரன் ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து, மே 31ம் தேதி கும்பாபிஷேக செய்ய முடிவு செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு மே 28ம் தேதி காலை 7 மணிக்கு காவிரி ஆற்றுக்குச் சென்று புனித தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. மாலை 6 மணிக்கு தேவ, திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரக ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.மே 29ம் தேதி காலை 10.30 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மாலை 5 மணிக்கு புண்யாகவாசனம், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரேசவம், முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதியும் நடக்கிறது. மே 30ம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.அதை தொடர்ந்து, மாலை 4.45 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவு 11 மணக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மே 31ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி நாடி சந்தானம், மகா தீபாராதனையும், காலை 7.30 மணிக்கு கடம் புறப்பாடு, விமாக கும்பாபிஷேகமும், தொடர்ந்து முலாலய கும்பாபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், ஸ்வாமி தரிசனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர், ஊர்மக்கள் செய்துள்ளனர்.