அரூர்: அரூர் அருகே வெள்ளையப்பன் ஸ்வாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அரூர் - சேலம் சாலையில் மஞ்சவாடி கணவாய் பகுதியில் வெள்ளையப்பன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து இவ்வழியாக செல்லும் லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களின் ஓட்டுனர்கள் கோவிலுக்கு முன்பு நிறுத்தி ஸ்வாமியை கும்பிட்டு செல்வார்கள். இக்கோவிலில் நான்கு மாதங்களுக்கு முன் ஹிந்து அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன் தர்மபுரி உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் சங்கர், செயல் அலுவலர் புனிதராஜ் தலைமையில் முதன் முறையாக வெள்ளையப்பன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் அலுவலர் கருணாநிதி, பஞ்சாயத்து தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டது. 3 லட்சத்து 67 ஆயிரத்து 851 ரூபாய் கணிக்கை இருந்தது. மேலும் வெள்ளி பொருட்களும் இருந்தது.