சொக்கச் செய்யும் சோமநாதபுரம் மாபெரும் சிற்பக்கூடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2012 02:05
சோமநாதபுரம் கோயிலில் பெரிய பிரகாரமும், மண்டபங்களும் உள்ளன. பிரகலாதன் வரலாறு, ராமாயணம், மகாபாரதச் சிற்பங்கள், தசாவதாரக் காட்சிகள், ஹயக்ரீவர், பிரம்மா, சிவன், கணபதி, மன்மதன், லட்சுமி, சரஸ்வதி, கருடன், இந்திரன் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. யோகநிலையில் இருக்கும் விஷ்ணு சிற்பம் வித்தியாசமானது. பத்மாசனத்தில் விஷ்ணு வலக்காலையும், இடக்காலையும் மடித்து அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். முத்திரை காட்டும் வலக்கரத்தை இடக்கரம் தாங்கி நிற்கிறது. விழிகளில் கருணையும், முகத்தில் சாந்தமும் தவழ்கிறது. மேலிரண்டும் விஷ்ணுவிற்குரிய சங்கு, சக்கரத்தை தாங்கி நிற்கின்றன. மொத்தத்தில் இக்கோயில் ஒரு மாபெரும் சிற்பக்கூடமாக விளங்குகிறது.