புதுச்சேரி : லாஸ்பேட்டை முத்துமாரியம்மனுக்கு, ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை, முத்துலிங்கப்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு ராஜராஜேஸ் வரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.