கோவில் பாதுகாப்பு படைக்கு ஆள் தேர்வு: கலெக்டர் தகவல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2012 10:05
கரூர்: கரூர் மாவட்டத்தை சேர்ந்த கோவில்களில் பாதுகாப்பு படையில் சிறப்பு காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கரூர் மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது: கரூர் மாவட்ட கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கு பணிபுரிய விருப்பமுள்ள நல்ல உடல் திறன் கொண்ட 62 வயதுக்குள் உள்ள முன்னாள் படைவீரர்கள், தங்கள் விருப்பத்தை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செ ய்து சமர்ப்பிக்கலாம். மேலும், பழைய தொகுப்பூதியம் 1,500 ரூபாய் தற்போது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விரைவில் தங்கள் விருப்ப விண்ணப்பத்தை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.