புதுச்சேரி : நெட்டப்பாக்கம் பகுதியிலுள்ள கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்கான நிதியை எம்.எல்.ஏ., பெரியசாமி வழங்கினார். இந்து அறநிலையத்துறை மூலமாக நெட்டப்பாக்கம் தொகுதியிலுள்ள 8 கோவில்களுக்கு தலா 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான காசோலையை நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,பெரியசாமி வழங்கினார். அ.தி.மு.க.,நிர்வாகிகள் வெங்கடேசன், சுப்ரமணி,சொக்கலிங்கம், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.