புதுச்சேரி; சித்தானந்த சுவாமி கோவிலில் சனி மகா பிரதோஷ உற்சவம் நடந்தது. கருவடிக்குப்பத்தில் பிரசித்திப் பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சனி மகா பிரதோஷ உற்சவம் நேற்று மாலை நடந்தது.உற்சவத்தை முன்னிட்டு, சுவாமிக்கும், நந்திக்கும் பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பிரதோஷ நேரத்தில் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அபிேஷகம் முடிந்த பிறகே, உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.உற்சவ ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தி, தேவசேனாதிபதி குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.