பதிவு செய்த நாள்
20
ஜூலை
2020
05:07
வீரபாண்டி: இளம்பிள்ளை, சந்தைப்பேட்டையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பார்வதி பரஞ்ஜோதிஸ்வரர் கோவில் உள்ளது. ஊரடங்கால் பூட்டப்பட்டிருந்த கோவில் முன், சனி மகா பிரதோஷமான நேற்று, திரளான பக்தர்கள், வெளியே நின்று, சுவாமியை தரிசித்தனர். ஆனால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், ஒருவருக்கெருவர் ஒட்டியபடி, ஒரே இடத்தில் குவிந்ததால், தொற்று அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, மகுடஞ்சாவடி போலீசார் வந்து, பக்தர்களை கலைந்து போகச்செய்தனர். ஆட்டையாம்பட்டி, சென்னகிரி, மருந்தீசர் கோவில் கிராமப்புறத்தில் வருவதால், பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், மூலவர் மருந்தீசருக்கு சிறப்பு அபி?ஷகம் செய்து, வில்வ இலை மாலை, சந்தன காப்பால் அலங்காரம் செய்யப்பட்டது. முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.