மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்கள் இணையத்தில் ஒளிபரப்பப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2020 08:07
மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று ஆடி முளைக்கொட்டு உற்ஸவ கொடியேற்றம் நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களை கோயில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.ஆண்டின் 12 மாதங்களும் திருவிழா நடப்பது இக்கோயிலின் சிறப்பு. சித்திரை, ஆவணி திருவிழாக்கள் முக்கியமானவை. ஊரடங்கால் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது. இதை பின்பற்றி அழகர்கோவிலில் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி, சமயபுரம் ஆடி அமாவாசை நிகழ்ச்சிகள் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டன.கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், வெளியூர், வெளிநாடு பக்தர்கள் நேரில் தரிசனம் செய்தது போல் மகிழ்ந்தனர்.நேற்று மீனாட்சி கோயில் ஆடி முளைக்கொட்டு உற்ஸவ கொடியேற்றம் நடந்தது. இதுபோன்ற நிகழ்ச்சி உட்பட கோயிலின் அனைத்து திருவிழாக்களையும் பக்தர்கள் காண இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அறநிலையத்துறை சார்பில் டிவி சேனல் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தாலும், இணைய ஒளிபரப்பு தொடர வேண்டும்.