மதுரை, கொரோனாவால் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகையில் கரைக்கப்படும். இந்தாண்டு கொரோனாவால் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி தருமா என்பது சந்தேகமே. அதேநேரம் உச்சநீதிமன்றம் உத்தரவுபடி சமூக இடைவெளிவிட்டு ஒடிசா பூரி ஜெகநாதர் தேர் திருவிழா நடந்தது. சமூக இடைவெளி பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தயாராக இருப்பதாக ஹிந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.மாவட்ட தலைவர் அழகர்சாமி கூறியதாவது: இந்தாண்டு பொறுப்பாளர்களின் வீடுகள் முன் 3 அடி உயர சிலைகளை வைக்க தெரிவித்துள்ளோம். அரசு வழிகாட்டுதல்படி ஊர்வலமும் நடத்த தயார். அரசிடம் பேசுவோம், என்றார்.