மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களின் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க கடன்பட்டிருப்பதை வேதம் ‘பித்ரு ருணம்’ என்கிறது. இதற்கு முன்னோர் கடன் என்று பெயர். வாழ்ந்து மறைந்த முன்னோர்களான பாட்டி, தாத்தா, தாய், தந்தை ஆகியோர் ‘பித்ருக்கள்’ எனப்படுவர். இவர்களுக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய முக்கிய கடமை தர்ப்பணம். ‘தர்ப்பணம்’ என்றால் திருப்தி செய்வது என்பது பொருள். முன்னோர்களுக்கு நீரை அளித்து அருள் பெறுவதால் இதற்கு ‘நீர்க்கடன்’ என்றும் பெயருண்டு.