Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெடையலிங்கய்யா சுவாமி திருக்கோயில் ... உலகம்பட்டி சுப்பிரமணியசாமி கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் உலகம்பட்டி சுப்பிரமணியசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து விடிய விடிய நடந்த வினோத திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து விடிய விடிய நடந்த வினோத திருவிழா

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
04:02

வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ஒன்று கூடி நடைபெறும், நிலா பெண் வழிபாடு எனும் வினோத திருவிழா விடிய விடிய நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.


வேடசந்தூர் ஒன்றியம், குட்டம் ஊராட்சி தேவிநாயக்கன்பட்டியில் 300 வீடுகள் உள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயம் செழிக்கவும் மக்கள் நலமுடன் வாழவும் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று ஒரு சிறுமையை நிலா பெண்ணாக தேர்வு செய்து ஊர் மக்கள் ஒன்று கூடி வினோத வழிபாடு நடத்தப்படுகிறது. தைப்பூசத்திற்கு ஒரு வாரம் முன்பே ஊர் மக்கள் ஒன்று கூடி நிலா பெண்ணை ஒருமனதாக தேர்வு செய்கின்றனர். தேர்வு செய்யப்படும் வயதுக்கு வராத அந்த சிறுமியை நிலாவுக்கு மனைவியாக பாவித்து கொண்டாடுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட அந்த நிலா பெண்ணுக்கு ஒரு வார காலத்திற்கு அப்பகுதியில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி அங்குள்ள கோயிலில் வைத்து பால், பழம், பேரிச்சை உள்ளிட்ட சத்தான உணவுகளை கொடுத்து மகிழ்கின்றனர். நடப்பு 2026 ல் கோட்டூரைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி -மகாலட்சுமி தம்பதியினரின் மகள் ஜியா ஸ்ரீ 10, தேர்வு செய்யப்பட்டார். அங்குள்ள அரசு துவக்கப் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறார்.


நேற்று இரவு தைப்பூசத்தை முன்னிட்டு இரவு 9:00 மணி அளவில், ஊரில் உள்ள மாசடச்சியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஊர் மக்கள் புடைசூழ நிலா பெண்ணை ஊர அருகே உள்ள சரளைமேடு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கூடியிருந்த பெண்கள் ஆவாரம் பூவை தலை மற்றும் கை கால்களில் சூடி, ஆவாரம் பூ நிரம்பிய கூடையை தலையில் வைத்து, மீண்டும் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு அழைத்து வந்தனர்.‌ அங்கு நிலா பெண்ணை அமர வைத்து பெண்கள் கூடி நின்று வட்டமிட்டு பாட்டு பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனர். அதன் பிறகு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து நிலா பெண்ணுக்கு சீர் செய்தனர்.‌ அதிகாலையில் ஊர் எல்லையில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்று, கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் இட்டு வணங்கினர் அதேபோல் கலையத்தில் விளக்கு ஏற்றி மிதக்க விட்டு வழிபாடு நடத்தினர். அதன் பிறகு ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். இன்று இரவு ஊர் மக்கள் சார்பில் மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நிலா பெண்ணே நிகழ்ச்சி, இப்பகுதியில் ஊரின் ஒற்றுமைக்காக, நீண்ட காலமாக நடத்தப்படும் ஓர் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar