பதிவு செய்த நாள்
24
ஜூலை
2020
10:07
கடலூர் : கடலூர், திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பராசக்தி அம்மனுக்கு ஆடிப்பூர உற்சவத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கடலூரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாடு மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில், பெண்கள், பொங்கலிடுதல், புற்றுக்கு பால் வார்த்தல், மாவிலக்கு போடுதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட, நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக, அம்மன் கோவில்கள், பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால், கோவில்களில், ஆடி சிறப்பு பூஜை விமரிசையாக நடத்தப்படுகிறது. அதன்படி , கடலூர், திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பராசக்தி அம்மனுக்கு ஆடிப்பூர உற்சவத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.