பதிவு செய்த நாள்
25
ஜூலை
2020
03:07
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடிப்பூரம், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது.
பெருமாளுக்கும், ஆண்டாள் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வழிபாட்டில், வளையல் பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நாக சதுர்த்தி பூஜையும் நடந்தது.குமரன் நகரில் எழுந்தருளியுள்ள கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.புளியம்பட்டி மாரியம்மன், உச்சி மாகாளியம்மன் கோவில்களில், ஆடி வெள்ளி சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி கடைவீதி மாரியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உடுமலைஉடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், ஆடிப்பூரம் விழா நேற்றுமுன்தினம் துவங்கியது.
காலை, கணபதி ேஹாமத்துடன், குபேர லட்சுமி பூஜை மற்றும் பூமிலட்சுமி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில், விநாயகர் கோவிலிலிருந்து, ஆண்டாள் நாச்சியார் கோவிலுக்கு திருக்கல்யாண சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் மண்டபத்தில், ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் சுவாமிகளின் நிச்சயதார்த்த உற்சவம் நடந்தது. நேற்று, அதிகாலை முதல், கோ பூஜையுடன் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. காலை, 8:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார், பூமிலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், நடந்தது. பூமிலட்சமி அம்பாளுக்கு சிவப்பு நிற பட்டுடுத்தி, அருள்பாலித்தார்.தொடர்ந்து, சிறப்பு ேஹாமம் நடந்தது. கோவில் வளாகத்தில், சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் வேத மந்திரங்கள் முழங்க துவங்கியது. புண்யகாவாசனம், காப்பு கட்டுதல், காசிக்கு செல்லுதல், சுவாமிகளுக்கு பூநுால் அணிதல் உள்ளிட்ட திருமண நிகழ்வுகள் நடந்தன.பின், சுவாமிகளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாள் நாச்சியாருக்கு திருமாங்கல்ய தாரணம் நடந்தது. ஆண்டாள் நாச்சியார் சமேத ரங்கமன்னார் திருமண கோலத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தனர்.உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பள்ளபாளையம் சுடலை ஈஸ்வரர் கோவிலில், நடந்த விழாவில் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், மஹா அருள் நிகும்பலாயாகம் மற்றும் ஆடிப்பூர விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை, 8:00 மணிக்கு லலிதாசஹஸ்ரநாமமும், காலை, 10:00 மணிக்கு துர்க்கா ேஹாமம், நிகும்பலாயாகமும் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு துர்க்கை அம்மனுக்கும், பிரத்யங்கிராதேவிக்கும் அபிஷேக ஆராதனையும், அலங்காரபூஜையும் நடந்தது.-- --நிருபர் குழு -