பொள்ளாச்சி: ஆனைமலை ரங்கநாதப்பெருமாள் கோவிலில், கருட பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், கருட பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி, கருடாழ்வாருக்கு, பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, வெட்டிவேர் மாலை, பாசி மாலைகள் அலங்கார பூஜை நடைபெற்றது.அதில், கருடாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி, சிறப்பு வழிபாடு மட்டும் நடந்தது.