பதிவு செய்த நாள்
28
ஜூலை
2020
02:07
திண்டிவனம், -கொரோனோ நோய் தொற்று காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அனைத்து பகுதி களிலும், பலவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று முதல், பத்து நாட்கள் வரை, பூஜை செய்து, நீர்நிலைகளில் விஜர்சனம் செய்வது வழக்கம். நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும், விநாயகர் சிலைகளை போட்டி போட்டு வாங்கி பூஜை செய்து வந்தனர். இதற்காகவே வியாபாரிகள் பலர், களிமண், கிழங்கு மாவில் தயார் செய்யப்பட்ட, ஒரு அடி முதல், பத்து அடி,இருபது அடி உயரமுள்ள, பல வண்ணங்கள பூசப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து, விற்று வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டு அந்தாண்டி டிரன்டாகிவரும் சம்பவங்களை கொண்டு விநாயகர் சிலைகள் வடிவகைக்கபட்டு பக்தர்கள் பிரதிஷ்டை செய்து வணங்குவதுவழக்கம் .மேலும் பொது இடங்களான கோவில்கள் முன்,, ஆட்டோ , கார் ஸ்டேண்டுகளில் பிரமாண்ட சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.இந்தாண்டு அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.இதற்கிடையே, கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக உலகத்தையே மிரட்டி வரும், கொரோனோ நோய் தொற்று தீவிரமடைந்துள்ளது.
வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த முக்கிய அம்சமாக அரசு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது. இதனால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவது தடை விதிக்கப்பட்டது.போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை பக்தர்களின் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு கோவில்கள் மூடப்பட்டன. முக்கிய உற்சவங்கள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. அதிகளவில் மக்கள் கூடும் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில்கள் மூடப்பட்டுள்ளன.
மீண்டும்கோவில்களை திறப்பதற்கு, அரசிடமிருந்து எந்த உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை. இதனால் பல்வேற தரப்பின் ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது கேள்விக்குறியாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், இதுவரை விழுப்புரம் மவட்டத்தில் விநாயகர் சிலை செய்யும் இடங்களில் சிலைகளை வாங்குவதற்கான ஆர்டர் சூடுபிடிக்கவில்லை.விநாயகர் சிலை தயாரிக்கும் சிற்பக்கலைக்கூட உரிமையாளர்கள், விரல் விட்டும் எண்ணும் அளவிற்கு கூட விநாயகர்சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபடவில்லை.
இது குறித்து அவர்கள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும்பல்வேறு இடங்களில், விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அதிகளவில் விநாயகர் சிலை விற்போம். இரண்டு மாதங்களுக்கு முன்பு, விநாயகர்சிலை தயாரிக்கும் பணியை துவக்கி விடுவோம். ஆனால், இந்தாண்டு இதுவரை விநாயகர் சிலைகளுக்கான ஆர்டர் வரவில்லை. கடந்தாண்டு மட்டும் 5 லட்சத்திற்கு விற்பனை செய்தேன். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்த வியாபாரம் நடக்குமா என்ற அச்சம் உள்ளது என்றார்.