கட்டுமான பணிக்காக அயோத்தி செல்லும் ராமேஸ்வரம் தீர்த்தம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2020 08:07
தேவகோட்டை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து புனித தீர்த்தம், ராமர் பாதத்தில் இருந்து மண் எடுத்து செல்லப்படுகிறது. விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் காளிதாஸ், செயலாளர் புருேஷாத்தமன் எடுத்து அயோத்தி நோக்கி சென்றனர். அவர்களுக்கு தேவகோட்டை அருகே புளியாலில் மாவட்ட தலைவர் கென்னடி, செயலாளர் அழகப்பன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் லட்சுமிநரசிம்மன், நகர் தலைவர் சுரேஷ், செயலாளர் வீரையா, அமைப்பாளர் புவனேஸ்வரி பங்கேற்றனர்.