Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: ... அயோத்தி ராமர் கோவில் கட்டு மானப் ...
முதல் பக்கம் » ஆன்மிகபூமி அயோத்தி » செய்திகள்
வேத மந்திரம் முழங்க அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
12:08

அயோத்தி: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, இன்று (ஆக.,05) காலை நடைபெற்றது. பிரதமர் மோடி 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, அடிக்கல் நாட்டினார். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது.

Default Image

Next News

இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடக்கிறது. இதையொட்டி, அயோத்தி மாவட்டம் முழுவதும், விழாக்கோலம் பூண்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, பூமி பூஜைக்கான சடங்குகள், அயோத்தியில் இரு நாட்களுக்கு முன்னரே துவங்கின. இதற்காக, வாரணாசியிலிருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மோடி வருகை: இன்று காலை, 8:00 மணி முதல், அடிக்கல் நாட்டு விழாவுக்கான பூஜைகள் துவங்கியது. விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியிலிருந்து, காலை 9:35 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, லக்னோவுக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், அயோத்தி சென்று முதலில், ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். அடுத்து, 12:00 மணிக்கு, ராம ஜன்மபூமிக்கு சென்றார். பகல், 12:40 மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார். மதியம், 2:00 மணியளவில், அயோத்தியிலிருந்து புறப்பட்டு, டில்லி திரும்புகிறார். ராமர் கோயில் பூமி பூஜையை நாடு முழுவதும் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக, 200 வி.வி.ஐ.பி.,க்களுக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி நிலம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரி, முக்கிய விருந்தாளியாக பங்கேற்கிறார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட, பலரும் விழாவில் பங்கேற்றனர்.

நனவான மோடியின் கனவு: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 1990-ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு நடத்திய ரத யாத்திரையிலும், 1991-ல் பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் ஒற்றுமை யாத்திரையின் போதும் பிரதமர் மோடி அயோத்திக்கு உடன் சென்றார். அங்கு நிருபர்களிடம் மோடியை காட்டி, ‛இவர் தான் குஜராத் பா.ஜ. தலைவர், என ஜோஷி அறிமுகம் செய்து வைத்தார். மோடியிடம் நிருபர்கள் ‛அடுத்த முறை அயோத்திக்கு எப்போது வருவீர்கள்? எனக்கேட்டனர். அதற்கு அவர், ‛ராமர் கோயில் அடிக்கல்

நாட்டு விழாவிற்கு வருவேன், என்றார். இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார். தான் கூறியது போலவே மோடியின் கனவு நிறைவேறியுள்ளது.

கனவு நிறைவேறியது: ராமர் கோவில் கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டிய பா.ஜ., மூத்த தலைவரான எல்.கே. அத்வானி பூமி பூஜையில் பங்கேற்றவில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்வையிடுகிறார். பூமி பூஜை குறித்து அவர் கூறியதாவது: ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு, அந்த கனவு நிறைவேறியுள்ளது. இது எனக்கு மட்டுல்ல, நாட்டு மக்களுக்கு மகத்தான, வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர் கோவில் கட்டுவதற்கான பல தியாகங்களை மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியை நமது தினமலர் இணையதளத்தில் நேரலையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் ஆன்மிகபூமி அயோத்தி செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடும் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் ராம் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டது முதல் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
உத்தரப்பிரதேசம்; உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar