பதிவு செய்த நாள்
17
மே
2012
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் முக்கியமானது வைகுண்டப் பெருமாள் கோவில். பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. கோவில் முழுவதும் மணல் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவில், ஸ்ரீபரமேச்சுர விண்ணகரம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்திய தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மே மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். கொடியேற்றம்வழக்கம்போல் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் இன்று துவங்குகிறது. காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். அதன் பின், சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். இரவு சிம்ம வாகனம் உற்சவம் நடைபெறும். நாளை காலை ஹம்ச வாகனம், இரவு சூர்ய பிரபை உற்சவம் நடைபெறும். கருட சேவைபிரபல உற்சவமான கருட சேவை, 19ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும். இரவு ஹனுமந்த வாகனம் உற்சவம் நடைபெறும். மறுநாள் காலை சேஷ வாகனம், இரவு சந்திர பிரபை, 21ம் தேதி மோகினி அவதாரம், இரவு யாளி வாகனம், 22ம் தேதி காலை சப்பரம், இரவு யானை வாகனம் நடக்கிகறது. வரும் 23ம் தேதி மாலை திருத்தேர் திருமஞ்சனம், 24ம் தேதி காலை திருப்பல்லக்கு, இரவு குதிரை வாகனம், 25ம் தேதி காலை தீர்த்தவாரி, இரவு புண்ணியகோடி விமானம், 26ம் தேதி காலை சாந்தி திருமஞ்சனம், இரவு சப்தாவரணம், 27 மற்றும் 28ம் தேதி இரவு விடையாற்றி உற்சவம், 29ம் தேதி இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான், ஆய்வாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.