வில்வனேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2020 03:08
வேப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நல்லூர் வில்வனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேப்பூர் அடுத்த நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் விநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் கணபதி ஹோமம் நடத்தி, பால், தயிர், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து, அருகம்புல் மாலை சாத்தப்பட்டு, பொங்கல், கொழுக்கட்டை வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராம பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.