சிவபார்வதியை வலம் வந்து, மாம்பழம் வென்றவர் விநாயகர். இவர் தன்னைச் சுற்றி வருவோருக்கு தேகபலம், புத்திபலத்தை வழங்குகிறார். குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணமிடுதல், சிதறுகாய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல் என வழிபாட்டு முறைகள் பல இருந்தாலும் விசேஷ பிரார்த்தனை, பிரதட்சிணம் என்னும் சுற்றி வருவதாகும். சாதாரணமாக இவரை மூன்று முறை வலம் வந்தாலும், நினைத்தது நிறைவேற சதுர்த்தி திதியன்று 21, 48, 108 முறை என சுற்றுவது சிறப்பு. கடவுள் உயர்ந்தவராக இருந்தாலும் அவரைத் தாங்கும் சக்தி நம் மனதிற்கு உண்டு என்பதையே பெரிய உருவமுள்ள விநாயகருக்கு சிறிய மூஞ்சுறுவை வாகனமாக்கினர்.