நண்பர்கள் மத்தியில் உரையாடினார் முல்லா. அதில் வெளியூரைச் சேர்ந்த சிலர் இருந்தனர். நண்பரில் ஒருவர் வெளியூர் நபர்களிடம் முல்லாவை அறிமுகப்படுத்தினார். முல்லாவைப் பற்றி சொல்லும் போது, ‘இவருக்கு தெரியாத விஷயமே இல்லை’ என்றார். அதைக் கேட்டதும் ஒருவர், ‘‘ முல்லாவுக்கு குந்தீஷ் மொழி தெரியுமா?’’ எனக் கேட்டார். குந்தீஷ் தெரியாது என்றாலும் அதில் ஓரிரு சொற்கள் தெரியும். இருந்தாலும் அவர் வெளிக்காட்ட விரும்பவில்லை. நண்பர்கள் சிலர் முல்லாவிடம் குந்தீஷ் மொழியில் ஏதாவது சொல்லுங்கள் எனக் கேட்டனர். ‘ஆஷ்’ என்றால் சூடான சூப்’’ என்றார் முல்லா. ஆறின சூப்பை எப்படி சொல்வார்கள் எனக் கேட்டார் ஒருவர். ‘‘குந்தீஷ் பேசுபவர்கள் சூடான சூப் மட்டுமே குடிப்பர். அதனால் ஆறின சூப்புக்கான சொல் கிடையாது’’ எனக் கூறி தப்பித்தார்.