ராகுவிற்கு நேர் ஏழாம் பாவத்தில் கேது சஞ்சரிப்பார். அறிவியல் ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால் ராகு சஞ்சரிக்கும் பாகைக்கு நேர் எதிரே அதாவது சரியாக 180வது பாகையில் கேது சஞ்சரிப்பார். பொதுவாக ஒரு பாகைக்கு நேர் எதிர் பாகை என்பது எதிரான குணத்தையே பெற்றிருக்கும். அதனால்தான் ராகு அதிக ஆசை பிடித்தவர் என்பதால் கேது ஆசையைத் துறந்தவராக இருக்கிறார். ராகு அதிக வேகம் கொண்டவராக செயல்படுவதால், கேது அதற்கு நேர் எதிரான குணத்தைத் தருகிறார். உதாரணத்திற்கு லக்னத்தில் ராகுவைக் கொண்ட மனிதர் எதற்கெடுத்தாலும் அவசரப்படுபவராகவும், அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவராகவும் இருப்பார். ஏழாம் வீட்டில் கேது இருப்பதால் வாழ்க்கைத்துணைவர் அல்லது துணைவி அவருக்கு நேரெதிராக எது நடக்குமோ, அதுதான் நடக்கும் நம்மால் என்ன ஆகப்போகிறது என்ற குணத்தினைக் கொண்டவராக இருப்பார். பேராசைப்படுகின்ற குணத்தினை ராகு கொண்டிருப்பதால், அதனை சரிசமன் செய்யும் விதத்தில் முற்றும் துறந்த ஞானியாக கேதுவினை படைத்திருக்கிறான் இறைவன் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை. இங்கே அறிவியல் ரீதியாக யோசித்துப் பார்த்தால், நியூட்டனின் மூன்றாம் விதியும் நம் கவனத்திற்கு வரும். “திஷீக்ஷீ மீஸ்மீக்ஷீஹ் ணீநீtவீஷீஸீ, tலீமீக்ஷீமீ வீs ணீஸீ மீஹீuணீறீ ணீஸீபீ ஷீஜீஜீஷீsவீtமீ க்ஷீமீணீநீtவீஷீஸீ” என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. இதன் அடிப்படையில்தான் இறைவனின் படைப்புகளும் அமைந்திருக்கின்றன. யோகம் என்று நாம் கருதும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தருபவனாக ராகு இருப்பதால், அதற்கு நேர் மாறாக எதன் மீதும் ஆசைப்படாத தன்மையைத் தருபவராக கேது செயல்படுகிறார். இதனை முரண்பாடு என்று எண்ணக்கூடாது. இயற்கையின் நியதி என்றே கருத்தில் கொள்ள வேண்டும்.