மனிதர்கள் அறிந்தோ, அறியாமலோ பாவச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மனசாட்சி உறுத்தும் போது இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் தவறு செய்தவர்களை அவன் மன்னிக்க மாட்டான். தண்டனை வழங்கியே தீருவான். உண்மைவழி நடப்பவர், கோபம் இல்லாதவர், கருணை கொண்டோரை மட்டுமே இறைவன் மன்னிப்பான். ‘‘பொய் பேசாதவனின் குறையை இறைவன் மறைத்து விடுவான். கோபத்தை தடுத்துக் கொண்டு எல்லோரையும் மன்னிப்பவனின் வேதனையை அகற்றுவான். கருணையுடன் பிறருக்கு உதவுபவனை மன்னிப்பான்’’ என்கிறார் நாயகம்.