நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சி செய்திருந்தார்.