விருத்தாசலம் : விருத்தாசலம் ராதாகிருஷ்ண சுவாமி கோவிலில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் கம்பர் தெருவில் உள்ள ராதா ருக்மணி சமேத ராதாகிருஷ்ண சுவாமி கோவிலில் உள்ள தும்பிக்கை ஆழ்வாருக்கு நேற்று முன்தினம் காலை சிறப்பு வழிபாடு நடந்தது.மாலை 7:00 மணியளவில், எண்ணெய்காப்பு, திரவிய பொடிகளால் சிறப்பு அபிேஷகம், ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அப்பகுதி மக்கள் சமூக இடைவெளியில் தரிசனம் செய்தனர்.