மழை நாளில் மோதேரா சூரியக் கோவிலின் அற்புதக் காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2020 12:08
புது டில்லி: பிரதமர் மோடி தன் டுவிட்டர் பக்கத்தில், மழை நாளில் மோதேரா சூரியக் கோவில் அற்புதமாக காட்சி தருவதாக கூறி அதன் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
குஜராத்தின் மேசனா மாவட்டம், மோதேரா கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சூரியக் கோவில் உள்ளது. அகமதாபாத்திலிருந்து 100 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில், ஒடிஷாவின் கோனார்க் சூரியக் கோவிலை போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. தை மற்றும் ஆடி மாத முதல் நாளில், இக்கோவிலில் உள்ள சூரியனாரின் விக்ரகத்தின் மீது சூரிய ஒளி படுவது சிறப்பு.
இக்கோவிலின் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து அனைவரையும் காணும் படி மோடி கூறியுள்ளார். அந்த வீடியோவில், சூரியக் கோவிலின் மீது விழும் மழை நீர் எண்ணற்ற படிகட்டுகளில் அருவி போன்று சிதறிச் செல்கிறது. மழை ஓசையுடன் பின்னணியில் மெல்லியிசையும் ஒலிக்கிறது. மழை நாளில் கோவில் அற்புதமாக இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.