* ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ – இதுவே வாழ்வின் குறிக்கோள். * நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை இருந்தால் வாழ்வு சிறக்கும். * அலட்சியத்துடன் பணியாற்றாதே. யாரையும் இழிவாகக் கருதாதே. * உயிர்கள் மீது அன்பு செலுத்து. செடிக்கு தண்ணீர் விடுவதும் தர்மம் தான். * பக்தி இல்லாமல் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வீண். * பெருந்தன்மையுடன் பேசும் பலர், செயலில் சுயநலத்துடன் இருக்கின்றனர். * எதிர்பார்ப்பு இல்லாமல் கடவுளைச் சரணடைவதே உயர்ந்த பக்தி. * குறைகளை சொல்லி முறையிடவும், நன்றி செலுத்தவும் வழிபாடு அவசியம். * சுவாமிக்கு நைவேத்யம், காணிக்கை செலுத்துவது நன்றியின் வெளிப்பாடு. * தர்மத்தின் பாதையில் நடந்தால் வாழ்வில் நிம்மதி நிலைக்கும். * புகழுக்காக சமூக சேவையில் ஈடுபடுவது மோசடித்தனமானது. * அனைவரிடமும் இருக்க வேண்டிய நற்பண்பு கருணை. * கட்டாயப்படுத்தி ஒருவரிடம் வேலை வாங்குவது பெருமைக்குரியதல்ல. * கல்வியின் பயன் தெரிந்ததை நாலு பேருக்காவது கற்றுக் கொடுப்பதே. * வாரம் ஒருமுறை மவுன விரதம் இரு. மனம் துாய்மை பெறும். * வாழ்க்கைத்தரம் என்பது பணம் சார்ந்ததல்ல; மனநிலை சார்ந்தது. * பிறரை ஏமாற்றியோ, வயிற்றில் அடித்தோ சம்பாதிக்க வேண்டாம். * சுவரில் எறிந்த பந்தாக நிறைவேறாத ஆசை கோபமாக வெளிப்படும். * ஒழுக்கம் இல்லாத அறிவு மோசமான தவறுக்கு வழிவகுக்கும். * மனதிலுள்ள அழுக்கைப் போக்கும் சக்தி ஒழுக்கத்திற்கு உண்டு.