அர்த்தம் தெரியாமல் வேத மந்திரங்களை உச்சரித்தாலும் சக்தி உண்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2020 02:08
மதுரை,அர்த்தம் தெரியாமல் வேத மந்திரங்களை உச்சரித்தாலும் சக்தி உண்டு என மகா பெரியவர் கூறியுள்ளார் என மதுரை காஞ்சி காமகோடி பீடம் சார்பில் நடந்த குரு மகிமை சொற்பொழிவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.அவர் பேசியதாவது: காஞ்சி பெரியவர் சைவ, வைஷ்ணவ பேதமின்றி இருந்தார். வேறு சித்தாந்தங்களை கடைபிடிப்பவர்களும் அவரை ஏற்றனர். சனாதன ஹிந்து மதத்தின் நீர், நெருப்பு பிறப்பு முதல் இறப்பு வரை முக்கிய பங்கு வகிக்கிறது.ஜப்பான் விஞ்ஞானிகள் வேத மந்திரம் உச்சரித்த நீரை உறையவிட்டு பனிக்கட்டியாக்கிய போது அந்தந்த தேவதைகளின் மந்திரங்கள் பதிவானதை உறுதி செய்தனர். இதிலிருந்து நீரில் மந்திரம் ஏற்படுத்தும் அதிர்வை அறியலாம். வேத மந்திரங்களை அர்த்தம் தெரியாமல் முழு மனதுடன் உச்சரித்தாலும் சக்தி உள்ளதாக இருக்கும் என பெரியவர் கூறியுள்ளார். தமிழை ஆதரித்த இந்த மடத்தின் மீது தமிழ் தாத்தா உ.வே.சா. மிகுந்து பக்தி கொண்டவராக இருந்தார் என்றார். நிகழ்ச்சியை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.