விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தில் உள்ள மசூதியில் தீமிதி திருவிழா நடந்தது.அனைவரின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக நடந்த விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மசூதியின் உள்ளே முஸ்லிம்கள், அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தபடி, பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து 11:30 மணிக்கு, மாலை அணிந்த முஸ்லிம்கள், இந்துக்கள் அனைவரும் மேள தாளங்கள் முழங்க, பெண்ணையாற்றில் புனித நீராடி, மீண்டும் மசூதிக்கு வந்து, மசூதி முன் இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இந்துக்கள், முஸ்லிம்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.