மகாவிஷ்ணு வழிபாட்டிற்கு உபவாசம் இருத்தல், ஹரிகதை (பக்திக்கதை) கேட்டல் அவசியம். ‘உபவாசம்’ என்பது ‘பட்டினி கிடப்பது’ ‘அருகில் இருப்பது’. அதாவது கடவுள் சிந்தனையுடன் இருப்பது உபவாசம். வயிற்றுக்கு ஓய்வு அளிப்பதே விரதத்தின் நோக்கம். இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். பக்திக் கதைகளைக் கேட்பதால் மனம் துாய்மை பெறும். பிரகலாதன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே ஹரி கதையைக் கேட்டதால் தான் பக்திமானாக விளங்கினான். திருவோணம், ஏகாதசி நாட்களில் பக்திக் கதை கேட்பது, பகவானின் திருநாமங்கள் பாடுவது, ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்தகளைப் பாடுவது புண்ணியம் அளிக்கும்.