‘புலிக்களி’ அல்லது ‘கடுவாக்களி’ எனப்படும் நடனம் ஓண விழாவின் நான்காம் நாள் நடத்தப்படும். களி என்றால் நடனம். நடராஜரின் நடனத்தைக் கூட ‘திருவாதிரை களி’ என்பது இதனால் தான். இந்நாளில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் வண்ணங்களை பூசி புலி வேடமிட்டு நடனமாடுவர். 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராக ஆட்சி செய்த மன்னர் ராமவர்ம தம்புரானால் புலிக்களி நடனம் தொடங்கப்பட்டது. இசைக்கேற்ப புலி வேடமிட்டவர்கள் நடனமாடுவர்.