சீர்காழியில் உள்ள தாடாளன் கோயிலில் ‘உலகளந்த பெருமாள்’ அருள்புரிகிறார். இவர் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டியிருப்பார். இதற்கு காரணம் தெரியுமா? மகாபலியை ஆட்கொள்ள வந்தபோது, இரண்டடியால் உலகை அளந்தபின், ‘இன்னும் ஒரு அடி எங்கே?’ என்று ஒற்றை விரலைக் காட்டி கேட்பதாக சொல்வர். ஆனால் இதற்கு வேறு காரணமும் உண்டு. ‘ பரம்பொருளான என்னைப் பற்றிய நினைப்பு ஒன்றே மனிதனுக்கு இருக்க வேண்டும்’ என அறிவுறுத்தவே விரலை நீட்டியபடி இருக்கிறார்.