வழிகாட்டும் சாய்பாபா கோவிலில் 3ம் ஆண்டு தொடக்க விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2020 04:08
புதுச்சேரி : வழிகாட்டும் சாய்பாபா கோவிலில் 3 ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. புதுச்சேரி, கோரிமேடு அடுத்த பட்டானுார் கிராமத்தில் 108 மூலிகை காப்பு கண்ட அபிஷேகம் பெற்ற 6.5 அடி உயர கருட கல்லால் ஆன வழிகாட்டும் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலின் 3 ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. அதனையொட்டி காலையில் கோபூஜை, வேள்வி நடந்தது. மதியம் 12 மணிக்கு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர், சக்கரத்தாம்மாள், நாகதேவதை மற்றும் சாய்பாபாவுக்கு ஆரத்தி பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இத்தகவலை வழிகாட்டும் சாய்பாபா சாரிட்டபிள் டிரஸ்ட் சாய் சசி அம்மையார் தெரிவித்தர்.