Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் மற்றும் வீடுகளில் ஓணம் ... வழிகாட்டும் சாய்பாபா கோவிலில் 3ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரசேவகர்களின் தியாகத்தை சித்தரிக்கும் நினைவகம்: ராமர் கோவிலில் அமைக்க திட்டம்!
எழுத்தின் அளவு:
கரசேவகர்களின் தியாகத்தை சித்தரிக்கும் நினைவகம்: ராமர் கோவிலில் அமைக்க திட்டம்!

பதிவு செய்த நாள்

31 ஆக
2020
03:08

 அயோத்தி: பல ஆண்டுகளாக நீடித்த அயோத்தி நிலப்பிரச்சினை, கடந்த ஆண்டு நவம்பரில் முடிவுக்கு வந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கோவில் கட்டும் பணி துவங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 500 ஆண்டுகளாக ராமர் கோவில் போராட்டத்தில் கலந்துகொண்ட கரசேவகர்களின் தியாகத்தை அங்கீகரிக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதற்காக ராமர் கோவில் வளாகத்தில் கரசேவகர்களின் போராட்ட வரலாற்றை பதிவு செய்யும் வகையில் ஒரு நினைவகம் அமைக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், ராம ஜென்ம பூமி வளாகத்தில் அமையும் அனைத்திலும் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன. இக்கோவிலுக்காக கடந்த 500 ஆண்டுகளாக போராடிய கரவேகர்கள் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் நினைவகம் அமைக்க ஆலோசித்து வருகிறோம். ராமாயணத்தின் காட்சிகளை சித்தரிக்கும் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்படவுள்ளது என்றனர். இதன்மூலம், ராமர் கோவிலுக்கு வருபவர்கள் இடையே விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி.,) புகழை பரப்பும் நோக்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நினைவகத்தில் வி.எச்.பி., தலைவர் அசோக் சிங்கால், வி.எச்.பி., அறக்கட்டளை தலைவர் ஸ்ரீராமச்சந்திர பரமஹம்ஸ் ஆகியோரின் வரலாறும் இடம்பெற உள்ளது. கரசேவை செய்து உயிர்நீத்த கோத்தாரி சகோதரர்கள் உள்ளிட்டோரின் படங்களும் அதில் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமியை யொட்டி அம்மனுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; ஆனி மாதம் நான்காவது செவ்வாய் கிழமையான நேற்று, மயிலிறகு மாலை அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தெலுங்கானா கவர்னர் ஜெயிஷ்னுதேவ் வர்மா சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar