கீழப்பெரும்பள்ளம் கோயிலில் கேது பெயர்ச்சி விழா: நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2020 02:09
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேதுபகவான் மேற்கு நோக்கி தனி சந்நதியில் இருக்கிறார். பாம்பு தலையும் மனித உடலுடன் உள்ள இவர். சிம்ம பீடத்தில் இரு கரங்கள் கூப்பியபடி சிவ சன்னிதியை நோக்கி வணங்கியபடி இருக்கிறார். கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் இன்று, செவ்வாய் கிழமை கேது பகவான் பகல் 2.16 மணிக்கு தனுர் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் . அதனை முன்னிட்டு கேது பெயர்ச்சி விழா பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நடைபெற உள்ள சிறப்பு அபிஷேகத்தை பக்தர்கள் கண்டு களிக்க ஆன்லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.