திருப்பதி: திருமலையில் பவுர்ணமியை ஒட்டி கருடசேவை நடந்தது. திருமலையில் மாதந்தோறும் பவுர்ணமி இரவு வேளைகளில் கருடசேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. வருடாந்திர பிரம்மோற்ஸவத்தின் போது நடத்தப்படும் கருட சேவையை காண முடியாத பக்தர்கள் இதை கண்டு தரிசித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக உற்ஸவங்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஏப். முதல் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமியை எழுந்தருள செய்து கருடசேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. நேற்று பவுர்ணமியை ஒட்டி மாலை 6:௦௦ மணிமுதல் 7:௦௦ மணிவரை ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் கருடசேவை நடந்தது.