பதிவு செய்த நாள்
03
செப்
2020
11:09
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், அழகு நாச்சியம்மன் கோவிலில், பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், அழகு நாச்சியம்மன் கோவிலில், பவுர்ணமி பூஜை நடந்தது. விழாவையொட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன. அதன்பின், தீபாராதனை பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கோவிலில் வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். தற்போது, ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியுள்ளதால், பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி, பவுர்ணமி பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.