ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் நடைபெற்று வந்த பவித்ர உற்ஸவம் நிறைவடைந்தது. நிறைவு விழாவை முன்னிட்டு அன்ன வாகனத்தில் பெரியாழ்வார், கருட வாகனத்தில் பெரியபெருமாளும் பட்டு நுால் மாலை அணிந்து அருள்பாலித்தனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து வழிபட்டனர்.