அனுமன் என்னும் பக்த ரத்தினம், சுந்தர காண்டம் என்னும் மந்திர ரத்தினம் என்னும் இரண்டு ரத்தினங்களைக் கொண்ட பொக்கிஷம் ராமாயணம். பக்தர்களில் சிறந்தவர் அனுமன். ராம நாமத்தை இடைவிடாமல் ஜபிப்பவர் அவர். ராமபிரானின் அருள் பெற விரும்புவோர் ‘ஸ்ரீராம ஜெயம்’ என ஒருமுறை சொல்லி அனுமனைச் சரணடைந்தால் போதும். இதனால் ‘பக்த ரத்தினம்’ என அனுமன் போற்றப்படுகிறார். வாழ்வில் எத்தகைய துன்பம், கவலை, தடைகள் குறுக்கிட்டாலும் சுந்தர காண்டத்தைப் படித்தால் சூரியனைக் கண்ட பனி போல பிரச்னை மறையும். அன்னை சீதையின் துயர் துடைத்த அனுமனின் அருள் பெறுவதற்கு சுந்தரகாண்டம் படிப்பதே சிறந்த வழி.