சுபநிகழ்ச்சிகள் என்றால் முதலிடம் பிடிப்பது வெற்றிலை. மங்கலம் நிறைந்த வெற்றிலையில் ஸ்ரீராமநாமம் எழுதி அனுமனுக்குச் சமர்ப்பித்து வழிபட, தடைகள் நீங்கும், காரிய ஸித்தி உண்டாகும் என்பார்கள். சந்தனம் அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு, ஒரு வெற்றிலைக் காம்பை சந்தனத்தில் தோய்த்து, மற்றொரு வெற்றிலையின் பின்புறம் ராமா என்று எழுத வேண்டும். 5,7,9,11 என்ற எண்ணிக்கைப்படி இயன்ற அளவு ராம நாமம் எழுதலாம். பின்னர், ஸ்ரீராம நாமம் எழுதப்பட்ட அந்த வெற்றிலைகளை மாலையாகக் கோத்து அனுமனுக்குச் சார்த்தி, தயிர் சாதம் நிவேதனம் செய்து வழிபடவேண்டும். இதனால் தடைகள் யாவும் நீங்கி, எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.